கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து காட்டு யானை பலி
கூடலூர் அருகே பஞ்சுரா தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை இறந்தது.
கூடலூர்: கூடலூர் அருகே பஞ்சுரா தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை இறந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள பிதர்க்காடு வனச் சரகத்திற்குட்பட்ட பஞ்சுரா தனியார் எஸ்டேட்டில் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் உணவுத் தேடி அந்த பகுதிக்கு வந்த யானை அங்குள்ள பாக்கு மரங்களை முறித்து சாய்த்துள்ளது. பாக்குமரம் உயரழுத்த மின்பாதை மீது விழுந்ததில் மின் கம்பி அறுந்து மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.