தமிழ்நாடு

முதல்வர் ரங்கசாமியைக் கண்டித்து பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ திடீர் உண்ணாவிரதம்!

DIN


புதுச்சேரி மாநிலம், திருபுவனை(தனி) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக அங்காளன் உள்ளார். ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர், கடந்த தேர்தலின் போது சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், பாஜக எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக ஆதரவு எம்எல்ஏவான அங்காளன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் வந்து, வாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம்எல்ஏ என்பதால், எனது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. எனது தொகுதிக்கு அடிப்படை வசதிகள், எந்த வேலையும் செய்து  தரக்கூடாது என்று, முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளார்.

எம்எல்ஏ அங்காளனின் போராட்டத்துக்கு ஆதரவாக, போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம்.

இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எம்எல்ஏ அங்காளன் தெரிவித்தார்.

தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல் சட்டப்பேரவை எதிரே திரண்ட அவர்களது ஆதரவாளர்கள் சிலர், திருபுவனைத் தொகுதியை புறக்கணிக்க வேண்டாம், பாஜக ஆதரவு எம்எல்ஏவை புறக்கணிக்க வேண்டாம் என முதல்வர் ரங்கசாமியைக் கண்டித்து, பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி பாஜக ஆதரவு எம்எல்ஏ அங்காளனின் போராட்டத்துக்கு ஆதரவாக, பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரமும் பங்கேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT