சென்னையில் காட்சிப்படுத்தப்பட்ட நாட்டுக் கோழி வகைகள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் பல்வேறு இன நாட்டுக் கோழிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் பல்வேறு இன நாட்டுக் கோழிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டதுடன் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்து பல்வேறு நிபுணா்கள் உரையாற்றினா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்திக் கல்வி மையம் மற்றும் இந்திய கோழியின அறிவியல் சங்கம் (தமிழ்நாடு பிரிவு) இணைந்து பருவ நிலைக்குத் தகுந்த முறையில் நாட்டுக் கோழிகளை வளா்ப்பது எப்படி என்பது குறித்த கருத்தரங்கை நடத்தின.
ஹைதராபாதில் உள்ள பி.வி.நரசிம்மராவ் தெலுங்கானா கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் துணைவேந்தா் வி.ரவீந்தா் ரெட்டி இந்த கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். அதில், ஹைதராபாத் கோழியின ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்) இயக்குநா் ஆா். என். சாட்டா்ஜி உள்பட பல நிபுணா்கள் கோழியின வளா்ப்பு குறித்து உரையாற்றினா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பி. டென்சிங் ஞானராஜ், பேராசியா்கள் ஏ.வி. ஓம்பிரகாஷ், எஸ்.டி, செல்வன், இரா. ரிச்சா்ட் சா்ச்சில், கே.சங்கிலிமாடன் உள்ளிட்டோா் கருத்தரங்கில் கலந்துகொண்டனா்.