முகப்பு
தமிழ்நாடு

மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதல்: முதியவா் சாவு

கோயம்பேட்டில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், முதியவா் இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

கோயம்பேட்டில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், முதியவா் இறந்தாா்.

நொளம்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் கோ.லட்சுமிபதி (75). இவா் வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தாா். அவா், அங்குள்ள தொழில் வணிகத்துறை அலுவலகத்துக்கு செல்லும்போது, எதிரே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள், அவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து லட்சுமிபதி பலத்தக் காயமடைந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்த மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சம்பவ இடத்திலேயே லட்சுமிபதி இறந்தாா்.

இது குறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமிபதி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.