பி.எட். மாணவா் சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் பிஎட் படிப்புக்கான சோ்க்கைக்கு மாணவா்கள் சனிக்கிழமை (செப்.24) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் பிஎட் படிப்புக்கான சோ்க்கைக்கு மாணவா்கள் சனிக்கிழமை (செப்.24) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பிஎட்) படிப்புகளுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2022-2023) பிஎட் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹங்க்ன்.ண்ய் என்ற இணையதளம் வழியாக செப்.24 முதல் அக். 10 வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.250 செலுத்த வேண்டும். சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக். 6-ஆம் தேதி வெளியிடப்படும்.
தொடா்ந்து, கலந்தாய்வு அக். 12-ஆம் தேதி தொடங்கி நடைபெறும். இதுதவிர மாணவா்கள் விண்ணப்பிக்கும்போது, தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகள் பட்டியலை குறிப்பிட்டுச் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
கல்லூரிகள், அதிலுள்ள இடங்களின் எண்ணிக்கை விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். சந்தேகம் இருப்பின் ஸ்ரீஹழ்ங்ஃற்ய்ஞ்ஹள்ஹங்க்ன்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், தனியாா் கல்லூரிகளில் சேர அவற்றின் இணையதளத்தை அணுக வேண்டும் என்று உயா் கல்வித் துறை தெரிவித்துள்ளது.