தமிழ்நாடு

'பசுமை தமிழகம்' இயக்கத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

DIN

தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு 'பசுமை தமிழகம்' இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கிவைத்தார். 

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மகிழம் மரக்கன்றை நட்டு இந்த இயக்கத்தை அவர் தொடக்கிவைத்தார்.

மேலும் பாரம்பரிய விதைகள், காடுகள், மரங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கண்காட்சியினை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். 

இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி தமிழகத்தில் வனப்பரப்பை 28.3 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT