தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி: கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி

DIN


காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சுழற்சி முறையைப் பயன்படுத்தி அக்டோபர் 2ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல். 

கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவதை தடுப்பது குறித்து விவாதிக்க அறிவுறுத்தல். 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். 

கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை அக்டோபர் 12க்குள் அனுப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT