தமிழ்நாடு

மஹாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி தலமாகவும் புனித தலமாகவும் விளங்குகிறது. 

இக்கோயிலில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து செல்லுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுகிழமை புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.

அக்னி தீர்த்த கடற்கரையில் வாழ்ந்து மறைந்து முன்னோர்களுக்கு திதி, தர்பணம்,  கொடுத்த கடலில் நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடிய பின்னர்நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். 

பக்தர்களின் வருகை அதிகளவில் இருப்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோயில் நிர்வாகம் பக்தர்கள் கோயிலுக்குள் தடையின்றி  நீராடவும், தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  அமாவாசையை முன்னிட்டு  ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT