தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

இன்று ஒரே நாளில் 7.75 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 37 மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
இதுவரை (25-09-2022) 12-14 வயதுயுடைய 19,91,349 (93.89%) பயனாளிகளுக்கு முதல் தவணை 15,92,420 (75.08%) பயனாளிகளுக்கு மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15-17 வயதுயுடைய 30,54,613 (91.29%) பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 26,02,003 (77.76%) பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக மொத்தம் 92,27,702 (21.42%) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (25-09-2022) நடைபெற்ற சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் மற்றும் முன்னெச்சரிக்கை தவணையாக 5,95,660 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% முதல் தவணையாகவும் 91.61% இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். மேலும், மாநிலத்தில் இன்று (25.09.2022) நடைபெற்ற சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (26.09.2022) கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT