மேட்டூர் அணை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக குறைவு

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

DIN

மேட்டூர்:  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 9,051 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 92.40 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.33அடியாக சரிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

SCROLL FOR NEXT