கோப்புப்படம் 
தமிழ்நாடு

மன்னார்குடி அருகே இடி தாக்கி தந்தை, மகன் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயலுக்கு சென்றபோது இடிதாக்கி தந்தையும், திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன மகனும் திங்கள்கிழமை பலியாகினர்.

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயலுக்கு சென்றபோது இடிதாக்கி தந்தையும், திருமணம் ஆகி ஒரு மாதம் ஆன மகனும் திங்கள்கிழமை பலியாகினர்.

மன்னார்குடி அடுத்த முக்குளம்சாத்தனூர் ஊராட்சி தளிக்கோட்டை காலனி தெற்குதெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் அன்பரசன்(55) . இவரது மகன் அருள்முருகன்(30). ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததையடுத்து, நள்ளிரவு 1 மணிக்கு, தனது வயலில் மழைநீர் தேங்குவதை அகற்றுவதற்காக அன்பரசன், மகன் அருள்முருகனை அழைத்துக்கொண்டு வயலுக்கு சென்றார்.

பின்னர் இவர்கள் வீடுதிரும்பாத நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அன்பரசன் வயல் உள்ள அப்பகுதி வழியாக விவசாப்பணிக்கு சென்றவர்கள் வயலில் அன்பரசன்,அருள்முருகன் இருவரும் கருகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்ததையடுத்து, வடுவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை செய்ததில், நள்ளிரவில் மழைப் பெய்துகொண்டிருக்கும் போது வயலுக்கு வந்த அன்பரசன், அருள்முருகன் இருவர் மீதும் இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்ததையடுத்து.

இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணையும் செய்து வருகின்றனர்.

இடி தாக்கி உயிரிழந்த அருள்முருகனுக்கு திருமணம் நடைபெற்று ஒரு மாதம் ஆகிறது. ஒரே நேரத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT