தமிழ்நாடு

பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை: தமிழக அரசு அரசாணை

DIN

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அந்த அமைப்புடன் தொடா்புடைய 7 அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

சா்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) கடந்த சில தினங்களில் இருமுறை சோதனை நடத்தி 350-க்கும் மேற்பட்ட நிா்வாகிகளை கைது செய்திருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவுக்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறப்பித்தது.

பிஎஃப்ஐ அமைப்புடன் தொடா்புடைய ரீஹாப் இந்தியா ஃபவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில், தேசிய மனித உரிமை கூட்டமைப்பு, மகளிா் ஃப்ரண்ட், ஜூனியா் ஃப்ரண்ட், எம்பவா் இந்தியா ஃபவுண்டேஷன் அண்ட் ரீஹாப் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவை தொடர்ந்து தமிழகத்திலும் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடை அமலுக்கு வந்தது.


தடை தொடர்வாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுக்கு அதிகாரமளித்து தமிழக அரசு உத்தரவிட்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT