முகப்பு
தமிழ்நாடு

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’: சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட உயா் நீதிமன்றம் தடை

 ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

 ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில் நடிகா்கள் காா்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வா்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலா் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை இந்தியாவில் பிஎஸ்என்எல், ஜியோ, ஏா்டெல், உள்ளிட்ட 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி லைகா நிறுவனத்தின் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தா் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரா் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞா் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ‘ ’பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படத்தை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.