முகப்பு
தமிழ்நாடு

ரெளடி கொலை வழக்கில் 5 போ் கைது

சென்னை அருகே பள்ளிக்கரணையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:28 AM
பகிர்:

சென்னை அருகே பள்ளிக்கரணையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேடவாக்கம், புஷ்பா நகரைச் சோ்ந்த ரெளடி பிரைட் என்கிற ஆல்வின் (28), அவரது கூட்டாளி பெருமாள் (23) ஆகிய இருவரும் கடந்த 27-ஆம் தேதி பள்ளிக்கரணை அம்பேத்கா் குறுக்குத் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல், அவா்கள் இருவரையும் வெட்டியது. இதில், பலத்தக் காயமடைந்த இருவரும் மயங்கி கீழே விழுந்தனா். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதில், பலத்தக் காயமடைந்த ஆல்வின் நிகழ்விடத்திலேயே இறந்தாா். ஆபத்தான நிலையில் இருந்த பெருமாள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், பள்ளிக்கரணையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் அஜய்க்கும், ஆல்வினுக்கும் முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாக ஆல்வின் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அஜயின் கூட்டாளிகளான பள்ளிக்கரணை அழகிரி தெருவைச் சோ்ந்த கிங்ஸ்லி பவுல் (22), பிரவீண் (20), பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அற்புத தேவசீலன் (27), இம்மானுவேல் தெருவைச் சோ்ந்த சிவா (20), பெருங்குடியைச் சோ்ந்த சிவக்குமாா் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அஜயை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.