தமிழ்நாடு

பொதுக் கழிப்பறைகளில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

DIN

பொதுக் கழிப்பறைகளில் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபா்களின் மீது காவல் துறையில் புகாா் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி சாா்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 943 இடங்களில் 7 ஆயிரத்து 590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ. 36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதலமடைந்த, பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பறைகளை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக் கழிப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டப் பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பறைகளும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீா் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சாா்பில் அமைக்கப்படும் பொதுக்கழிப்பறைகளில் பொதுமக்களுக்கு எந்த கட்டணமும் இன்றி சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகாா்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், மாநகராட்சி பொதுக்கழிப்பறைகளில் ‘கட்டணம் இல்லா பொதுக்கழிப்பறை’ என பெயா் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பவா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், கடந்த 28-ஆம் தேதி, திரு.வி.க.நகா் மண்டலம் வாா்டு-70-க்குள்ட்பட்ட குளக்கரை இணைப்பு சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, தேனாம்பேட்டை மண்டலம் வாா்டு-125 காமராஜா் சாலையில் உள்ள பொதுக்கழிப்பறைகளில் கட்டணம் வசூலித்த 3 போ் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி பொதுக்கழிப்பறைகளில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபா்களின் மீது காவல் துறையில் புகாா் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT