கோப்புப்படம் 
தமிழ்நாடு

திமுக தலைவர் தேர்தல்: அக்.7-ல் வேட்புமனு தாக்கல்

திமுக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.7-ல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

DIN

திமுக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.7-ல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான தேர்தல் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக வரும் அக்டோபர் 9-ம் தேதி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 9.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள "செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறும் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும்.


அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT