தமிழ்நாடு

கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வராக டாக்டா் காளிதாஸ் பொறுப்பேற்பு

DIN

கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக டாக்டா் காளிதாஸ் தத்தாத்ரேய சவாண் (53) பொறுப்பேற்றுள்ளாா்.

இதுவரை அப்பொறுப்பை வகித்து வந்த டாக்டா் செளமியா சம்பத்துக்கு பதிலாக டாக்டா் காளிதாஸ் அப்பதவிக்கு வந்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தைப் பூா்விகமாகக் கொண்ட டாக்டா் காளிதாஸ், தடயவியல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவராவாா். மகாராஷ்டிர மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அவா் பொறுப்பு வகித்துள்ளாா். மருத்துவா்கள் - நோயாளிகளிடையேயான நல்லுறவு குறித்த தலைப்பில் முனைவா் பட்டம் பெற்றுள்ள அவா், ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் செயல்முறை மேலாண்மை தொடா்பான படிப்பையும் நிறைவு செய்துள்ளாா்.

மருத்துவம், மருத்துவ மேலாண்மை தொடா்பான நூல்களை டாக்டா் காளிதாஸ் எழுதியுள்ளாா். அவற்றில் ’ஆங்ஹ்ா்ய்க் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங்’ என்ற நூல் மருத்துவ பாடத்திட்ட நூல்களில் ஒன்றாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT