முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்தியா என்பது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தானா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

இந்தியா என்பது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தானா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

செங்கல்பட்டு மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் இருந்த தமிழகத்தை தலை நிமிர வைத்துள்ளது திமுக என்று கூறினார். 

உடன்பிறப்பு என்ற பாசப்பிணைப்புடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொதுமக்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது. நாம் மக்களோடு இருப்பதால் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். நான் முதல்வராவதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம் தான் என்று சுட்டிக்காட்டினர். 
 
தமிழகத்தில் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரி பட்ஜெட்டாக தமிழகத்தின் பட்ஜெட் உள்ளது. 

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழகம் நாட்டின் தலைசிறந்த மாநிலமாக மாறும். அதிமுக ஆட்சியில் வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தகுதிக்கேற்ப வேலை, இல்லம் தேடி மருத்துவ வசதி, சமூக நீதி ஆட்சி போன்றவையே திராவிட மாடல் ஆட்சி. ஹிந்தி பேச வேண்டும் என்கிறார் அமித் ஷா. இந்தியா என்பது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தானா என்று அனைவரும் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர் என்று குறிப்பிட்டார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →