மெரினாவில் சுதந்திர தினவிழா: மக்களுக்கு அனுமதி
சென்னை மெரினாவில் கொண்டாடப்படும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மெரினாவில் கொண்டாடப்படும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராஜாஜி சாலையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினவிழாவில் மக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.
Advertisement
இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த நிகழ்வில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.