தமிழ்நாடு

கனமழை: உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

DIN

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசுவதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அம்ரித் பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 18 செ.மீ., பந்தலூரில் 15 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

கருப்பு நிலா- ரச்சிதா மகாலட்சுமி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

SCROLL FOR NEXT