முகப்பு
தமிழ்நாடு

விருப்பமில்லாமல் திருமணம்: உயா் நீதிமன்றம் கருத்து

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தைப் பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Updated On : 18 டிசம்பர், 2022 at 8:02 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:37 PM

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தைப் பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபா் மாதம், தனது விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தைப் பதிவு செய்யக் கூடாது என பதிவுத் துறை தலைவருக்கு உத்தரவிடக் கோரி பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.சுப்பிரமணியன், திருமணம் நடந்து, அதைப் பதிவு செய்யாவிட்டாலும், அது செல்லத்தக்கதுதான் எனவும், அந்தத் திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத்தான் ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரா் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

மேலும், விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தைப் பதிவு செய்வதால் மட்டும், அதற்கு புனிதம் கூடி விடாது எனத் தெரிவித்த நீதிபதி, திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.