தமிழ்நாடு

தோல்வியுற்ற அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை

DINசாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் சுகுணாதேவி என்பவர் போட்டியிட்டார். இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்ற நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சுகுணாதேவி 215 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இதனால், மனமுடைந்த சுகுணாதேவியின் கணவர் நாகராஜன்(58) செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷமருந்தியுள்ளார்.

இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் நாகராஜனை மீட்டு சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நாகராஜன் சாத்தூர் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் பணி ஒய்வு பெற இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் நாகராஜன் உயிரிந்தது, நகராட்சி ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT