முகப்பு
பண்ணாரி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பாக்கு மூட்டைகள் 
தமிழ்நாடு

பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ. 18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல்; இருவர் கைது

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பண்ணாரி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பாக்கு மூட்டைகள் 
பகிர்:

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 

தமிழக - கர்நாடக எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் போலீசார் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தனர். 

அப்போது மைசூரில் இருந்து  வந்த கர்நாடக பிக் அப் வேன்களை சோதனை செய்தபோது காலிபிளவர் மூட்டைகளுக்குள் போதைப்பாக்குகள் கடத்திவது தெரியவந்தது.

இது தொடர்பாக பிக் அப் வேனில் வந்த  மைசூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசன்னா,(30) சுதி என்கிற சுதாகர்(30) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் காலிபிளவர் காய்கறி லாரியில் போதைப் பாக்குகளை மறைத்து கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இரண்டு பிக் அப் வேன்களையும் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, வி.ஒன். பாக்குகள் மற்றும் கணேசா பாக்குகள் என 75 மூட்டைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான சுமார் 2.2 டன்(2,250 கிலோ) போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா கடத்தல் தொடர்பாக பண்ணாரி சோதனையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →