முகப்பு
தமிழ்நாடு

கடலூர் திமுக எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கை ரத்து

கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதிக்குமாறு காட்சித் தலைவரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கட்சி உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →