முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலகத்திற்கு சீல்: வழக்கு ஒத்திவைப்பு 

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Updated On : 15 ஜூலை 2022, 5:55 pm IST
பகிர்:

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் ஜூலை 11-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் மோதிக் கொண்டனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா். மேலும், அலுவலகம் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- சென்னையில் தனியார் பேருந்தில் தீ

Advertisement

Advertisement

இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது சென்னை, ராயப்பேட்டையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்தது.

அத்துடன், தற்போது வரை இருத் தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னை ஏற்படலாம் என்று காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 
இதையடுத்து காவல்துறை அறிக்கைக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம் வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.