தமிழ்நாடு

ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பரபரப்பு கடிதம்

DIN

சென்னை: ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு  நேற்று கடிதம் எழுதினார்.

அதில், அதிமுக வேட்பாளா்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? பொதுக்குழுவை நிறுத்த நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தது ஏன்? அதிமுகவை செயல்பட விடாமல் தடுத்தவர் எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல. உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக எனக்கு எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல. பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், நுண்பாா்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் சமூக நீதிக்கு முக்கியத்துவம்: கி. வீரமணி பேச்சு

கரூா் தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரம்

பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து பயிற்சி

திருச்சியிலிருந்து 38 மாவட்டங்களுக்கு சென்ற 94 ஆயிரம் தபால் வாக்குகள்!

SCROLL FOR NEXT