முகப்பு
தமிழ்நாடு

200-க்கும் கீழ் குறைந்தது தமிழக தினசரி கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 196 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 196 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 50,113 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 196 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஆந்திரத்திலிருந்து திரும்பியவர்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,51,013 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 554 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஒருவர் மற்றும் அரசு மருத்துவமனையில் இருவர் என மொத்தம் 3 பேர் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 34,10,228 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,105 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 2,770 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.