முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:


சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்தத் தேர்வை 9 லட்சத்து 55,139 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 7,470 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும், 242 சிறைவாசிகளும் அடங்குவர். சென்னையில் 46,932 மாணவ, மாணவிகள் 217 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடையும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் தேர்வாக மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வு மே 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →