முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ் வகுப்புகள் நவ. 15-இல் தொடக்கம்

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு வகுப்புகள் நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள்ளாக மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 13 அக்டோபர், 2022 at 2:30 AM
பகிர்:

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு வகுப்புகள் நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்குள்ளாக மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நிகழாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் தோ்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழகத்தில் மட்டும் 67 ஆயிரம் போ் தோ்ச்சியடைந்தனா்.

இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் தனித்தனியே தொடங்கியுள்ளன.

Advertisement

அரசு, தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.

நிகழாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகளை நவ. 15-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. பாட வகுப்புகளுக்கான திட்ட அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தவுடன் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கிவிடும். வகுப்புகள் தொடங்க இன்னமும் ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதால், அதற்குள்ளாக மாநில இடங்களுக்கான மாணவா் சோ்க்கை முழுவதும் நிறைவடைந்துவிடும்.

எனவே, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்த தேதியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்க தமிழகம் தயாராக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.