தமிழ்நாடு

காலாண்டுத் தேர்வே தொடங்கிவிட்டது; எப்போதுதான் கிடைக்கும் பையும் செருப்பும்?

DIN


அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு வழங்கிவரும் விலையில்லா பொருள்கள் அரசுப் பள்ளி மாணவர்களை சென்றடைந்ததா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் இல்லை என்றே பதில் அளிக்கின்றன.

காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், கல்வித் தொகுப்பாக அரசு வழங்கிவரும் பொருள்கள்  கிராமப்புறங்களிலுள்ள பல்வேறு மாணவர்களுக்குச் சென்று சேராத நிலையே உள்ளது. 

அரசு வழங்கும் புத்தகப் பை, காலணி, புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் போன்றவை சமீபகாலத்தில்தான் வழங்கப்பட்டதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சலுகைகளை வழங்கி வருகின்றன. ''கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் தேவையான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். இலவச பொருள்கள் உள்பட அனைத்தும் குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களால் அரசு வழங்கும் சலுகைப் பொருள்களை விலை கொடுத்து பெற இயலாது என்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர்.

பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்ததாவது, கடந்த ஆட்சியிலும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் தாமதமாக வழங்கப்பட்டன. ஒருசில பகுதிகளில் 18 மாதங்கள் கழித்தும் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார். 

கடந்த பெருந்தொற்றுக்கு முன்பு பள்ளிகள் திறந்த இரண்டு வாரங்களில் அனைத்து பொருள்களும் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு நோட்ட்பு புத்தகங்கள் கூட தாமதமாவதாக அரசுப் பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

கல்வி உபகரணங்களில் வழங்கப்படும் காலணி போன்ற பொருள்கள் ஒருசில பகுதிகளிலுள்ள கிடங்குகளுக்கு வந்துள்ளன. அவைகளை வழங்குவதற்காக உயரதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். மாநிலம் முழுவதும் சீராக பொருள்களை வழங்குவதற்காக காத்திருக்குமாறு உயரதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எங்கள் உடற்கல்வி ஆசிரியர் காலணி (ஷூ) அணிந்து வரச் சொல்கிறார். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட காலணி எனக்கு பொருந்தவில்லை. புதிய காலணி இன்னும் பள்ளியில் வழங்கப்படவில்லை. இதனால் என் பெற்றோரிடம் காலணி வாங்கித்தருமாறு கேட்டுள்ளேன் என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்.

பள்ளி மாணவர்களுக்கான சீருடை மற்றும் காலணிகள் பெருமளவில் கொள்முதல் செய்து வழங்கப்படுவதால், அளவு குறித்து அரசு கவலை கொள்வதில்லை. மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் அவர்களின் அளவிற்கு பொருந்தவேண்டியது அவசியம். அரசு சார்பில் வழங்கப்படும் காலணி, சீருடை போன்றவை அளவில் சிறியதாக இருப்பதால் மாணவர்களுக்கு சிரமத்தையே கொடுக்கிறது. அரசு வழங்கும், ஜியோமெட்ரி பாக்ஸ், புத்தகப் பை, நோட்டுகள் போன்றவற்றின் தரத்தையும் மறுபரிசீலனை செய்வது அவசியம் என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி. 

இது குறித்து பேசிய பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைக் கழக மூத்த அதிகாரி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொருள்கள் விநியோகம் பரவலாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டுக்குத் தேவையான பொருள்களுக்கு தற்போதே டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், அடுத்த கல்வியாண்டில் ஏப்ரல் மாதமே மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT