ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினா் சனிக்கிழமை (ஏப்.15) ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை எழும்பூரில் காலை 11 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக, வீரன் அழகு முத்துக்கோன் சிலை அருகில் திரண்டு, அங்கிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்ல காங்கிரஸ் கட்சியினா் திட்டமிட்டுள்ளனா். இதேபோல, தமிழகம் முழுவதும் காங்கிரஸாா் 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.