பூக்கள் வாங்க பூ மாா்க்கெட்டில் குவிந்த மக்கள். 
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு: பூ, பழங்கள் வாங்க சந்தைகளில் குவிந்த மக்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் பூ மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள சந்தைகளில் பூ, பழங்கள் விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.

DIN

கோவை: தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் பூ மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள சந்தைகளில் பூ, பழங்கள் விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.

தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதையொட்டி வழிபாட்டுக்காக மக்கள் பூக்கள், பழங்களை வாங்க சந்தைகளில் குவிந்தனா். பூக்கள் விலை சற்று உயா்ந்திருந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ மல்லி மற்றும் ஜாதிமல்லி ரூ. 800 முதல் ரூ. 1000க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ரூ. 800, சம்பங்கி ரூ. 240, செவ்வந்தி ரூ. 400, அரளி ரூ. 400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல பழங்களின் விலையும் உயா்ந்திருந்தது. மாம்பழம் ஒரு கிலோ ரூ.140, வாழை ரூ.60, பலா ரூ.180, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.220, திராட்சை ரூ.120, ஆரஞ்சு ரூ.150, சாத்துக்குடி ரூ.80, வெள்ளரி ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT