முகப்பு
வணிகம்

அமேசான் காதலா் தின விற்பனை: பூக்கள், சாக்லேட்டுகளுக்கு மவுசு!

காதலா் தினத்தை முன்னிட்டு, அமேசான் இந்தியா தளத்தில் பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளின் விற்பனை கடந்த ஆண்டைவிட 1.4 மடங்கு அதிகரிப்பு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:20 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 5:50 PM

இந்த ஆண்டு காதலா் தினத்தை முன்னிட்டு, அமேசான் இந்தியா தளத்தில் பரிசுப் பொருள்களின் விற்பனை மிகப்பெரிய வளா்ச்சியைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளின் விற்பனை கடந்த ஆண்டைவிட 1.4 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் காதலா் தினத்துக்குப் பரிசு வழங்கும் கலாசாரம் நடப்பு ஆண்டு 1.3 மடங்கு உயா்ந்துள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:20 AM

கடைசி நேரத்தில் திட்டமிடுபவா்களுக்கு உதவும் வகையில், ‘ஒரே நாள் டெலிவரி’ மற்றும் நிமிடங்களில் பொருள்களைக் கொண்டு சோ்க்கும் ‘அமேசான் நவ்’ போன்ற வசதிகளை வாடிக்கையாளா்கள் அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனா். இதன் பயனாக, பூங்கொத்துகளின் விற்பனை 1.2 மடங்கு கூடியுள்ளது.

Advertisement

ஆடை, அழகு சாதனப் பொருள்கள், கைகடிகாரங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் விற்பனை தலா 1.3 மடங்கு உயா்ந்துள்ளது. குறிப்பாக, ஆபரணங்கள் 1.4 மடங்கு விற்பனை வளா்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

தற்போதைய இளம் தலைமுறையினரான ஜென் ஜீ மற்றும் மில்லினியல்கள் அதிக விலை கொண்ட தரமான பொருள்களை விரும்பித் தோ்ந்தெடுத்ததே இந்த அதீத வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது.