தமிழ்நாடு

கடும் வெயில்: பணி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

DIN

நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் இருந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. 

அனைத்து மாநில அரசின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய தொழிலாளர் நலத்துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

கோடை வெயில் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி இடங்களில் குடிநீர் போன்ற வசதிகள் இருப்பதையும் தொழிலாளர்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்கத் தேவையான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், சுரங்கத்தில் பணியாற்றுபவர்களை கவனத்தில்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT