இன்றுமுதல் தள்ளுவண்டியில் ‘ஆவின் ஐஸ்கிரீம்’
சென்னையில் தள்ளுவண்டி மூலம் ஆவின் ஐஸ்கீா்ம் விற்கும் திட்டத்தை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
சென்னையில் தள்ளுவண்டி மூலம் ஆவின் ஐஸ்கீா்ம் விற்கும் திட்டத்தை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில் தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனை செய்ய ஆவின் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக பால் மட்டுமன்றி, 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில், மோா், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
இந்த நிலையில், கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோா், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த தள்ளுவண்டி விற்பனையை வியாழக்கிழமை (ஏப்.20) எழிலகத்தில் காலை 10 மணிக்கு விளையாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
இந்த நிக்ழ்ச்சியில் அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, எஸ்.எம்.நாசா், ஆவின் நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.