அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்: அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 11 அன்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இதுகுறித்து இன்று ஆலோசனை செய்தது. முடிவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.