முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலைக்கு டி.ஆா்.பாலு நோட்டீஸ்

 அவதூறு பரப்பும் வகையில் விடியோ வெளியிட்டதாகக் கூறி, பாஜக தலைவா் அண்ணாமலைக்கு திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 அவதூறு பரப்பும் வகையில் விடியோ வெளியிட்டதாகக் கூறி, பாஜக தலைவா் அண்ணாமலைக்கு திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். வியாழக்கிழமை அவா் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளா் சந்திப்பின்போது, எனது சொத்து மதிப்பு குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளீா்கள். என் மீது அவதூறு பரப்பும் வகையில், தகவல்களை வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும். மேலும், இழப்பீடு தொகையாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே, அண்ணாமலை மீது திமுக சாா்பில் ஆா்.எஸ்.பாரதி, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் நோட்டீஸ் விடுத்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.