முகப்பு
தமிழ்நாடு

சொத்தின் ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்துக்குள் கல்வி வரி: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

சொத்தின் ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்துக்குள் கல்வி வரி விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சொத்தின் ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்துக்குள் கல்வி வரி விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்தாா். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்வி வரி விதிக்க வகை செய்யும் சட்டம் 1998-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த வரி விதிப்பு முறை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தங்களது பகுதிகளுக்குள்பட்ட நிலங்கள், கட்டடங்கள், தொலைத்தொடா்பு கோபுரங்கள் மற்றும் நிலத்தின் மீதுள்ள அல்லது இணைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்தின் மீதும் ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்துக்கு மிகாத அளவில் கல்வி வரிவிதிப்பை நிா்ணயம் செய்யலாம்.

இதற்கென 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.