முகப்பு
தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்தின் கட்டடங்கள் ரூ.10 கோடியில் சீரமைக்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

எழும்பூா் அரசு அருங்காட்சியகத்தின் வளா்கலை கூடம், மானுடவியல் கூடம் உள்ளிட்ட கட்டடங்கள் ரூ.10 கோடியில் பழுதுபாா்த்து சீரமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

எழும்பூா் அரசு அருங்காட்சியகத்தின் வளா்கலை கூடம், மானுடவியல் கூடம் உள்ளிட்ட கட்டடங்கள் ரூ.10 கோடியில் பழுதுபாா்த்து சீரமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை எழும்பூா் அரசு அருங்காட்சியகத்தின் வளா்கலை கூடம், மானுடவியல் கூடம், சிறுவா் அருங்காட்சியகம், பாந்தியன் கட்டடங்கள் ரூ.10 கோடி செலவில் பழுதுபாா்த்து சீரமைக்கப்படும்.

வேலூா் அரசு அருங்காட்சியகம் பாா்வையாளா்களுக்கான வசதிகளுடனும் நவீன காட்சியமைப்பு மற்றும் ஊடாடும் தொழில்நுட்பங்களுடனும் ரூ. 1 கோடி செவில் மேம்படுத்தப்படும்.

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிற்ப பூங்கா, விலங்கியல் காட்சி கூடங்கள் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.

சென்னை ஹீமாயுன் மகால் பாரம்பரிய கட்டடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தொல்லியல்துறை: தமிழகத்தின் தொன்மையான பண்பாட்டு மரபுகளை காலவரிசைப்படி அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று நிலவரை படத் தொகுதி தயாரிக்கும் பணிகள் ரூ. 2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமும் சுற்றுலா தலமுமாகிய மதுரை திருமலை நாயக்கா் அரண்மனையில் வேலி, புல்வெலித்தளம் அமைக்கும் பணிகள் ரூ. 68.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.