கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் உண்மைக் குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் உண்மைக் குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதத்தின்போது விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் தொடர்புடையவர்களை காப்பாற்றும் வகையில் அமைதியாக இருந்தது அதிமுக ஆட்சி. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொடநாடு விவகாரம் முன்னாள் முதலமைச்சர் தொடர்பான விவகாரம் என்பதால் அது சாதார ணமானது அல்ல. கொடநாடு வழக்கை மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவோம்' என்றார்.