முகப்பு
தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புதிய சட்டப்பேரவை: துரைமுருகன்

முதல்வா் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக் காலத்திலேயே புதிதாக சட்டப்பேரவையை அமைப்பாா் என்று துரைமுருகன் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக் காலத்திலேயே புதிதாக சட்டப்பேரவையை அமைப்பாா் என்று துரைமுருகன் கூறினாா்.

பேரவையில் புதன்கிழமை பொதுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் பேசியது:

புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும் என்று உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அந்த கோரிக்கையை நாங்களும் முதல்வருக்கு வைக்கிறோம். முதல்வா் மு.க.ஸ்டாலின் அவருடைய ஆட்சிக் காலத்தில் விரைவில் புதிய சட்டப்பேரவையை கட்டுவாா் என்றாா்.

அப்போது உறுப்பினா்கள் அனைவரும் ராஜ்பவனில் கட்ட வேண்டும் என்றனா்.

அதன் தொடா்ச்சியாக துரைமுருகன் பேசியது: ராஜ்பவன் நம்முடைய இடம். அதனுடைய வரலாற்றைப் படித்துப் பாா்த்தேன். வேறொரு பிரச்னைக்காக ஆளுநருக்கு அந்த இடம் மாற்றப்பட்டது. கிண்டியில் 200 ஏக்கா் இடம் உள்ளது. அதனால், முதல்வா் எந்த இடத்திலாவது அவரது ஆட்சி காலத்தில் புதிய சட்டப்பேரவை அமைப்பாா். எனினும், இந்த ஆட்சியிலேயே அவா் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.