முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உட்பட13 நகரங்களில் புதன்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தமிழகத்தில் சென்னை உட்பட13 நகரங்களில் புதன்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்:

பரமத்தி வேலூா் - 105.8, ஈரோடு - 105.08, வேலூா் - 103.82, மதுரை நகரம் - 103.64, மதுரை விமான நிலையம் - 103.64, நாமக்கல் - 103.1, திருச்சி - 103.1, சேலம் - 102. 92, திருப்பத்தூா் - 102.2, சென்னை - 101.84, கோவை - 101.64, தருமபுரி - 100.76, திருத்தணி - 100.58, தஞ்சாவூா் - 100.4 .

மிதமான மழைக்கு வாய்ப்பு: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) வரை நான்கு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி, குறைந்தபட்ச வெப்ப நிலை 80 டிகிரி என்ற அளவில் இருக்கக் கூடும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.