சென்னை: திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் ஒரு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில், திமுக அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த வாரம், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வழக்குரைஞர் மூலம், அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த நோட்டீஸில், அண்ணாமலை தரப்பில், திமுகவினர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் 48 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கோராவிட்டால், வழக்குத் தொடரப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு அண்ணாமலையின் வழக்குரைஞர் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பதிலில், திமுக நோட்டீஸில் கூறப்பட்டபடி ரூ.500 கோடியை இழப்பீடாகக் கொடுக்க முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது. திமுக மீது தாங்கள் அளித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.