முகப்பு
தமிழ்நாடு

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து, கடந்த மார்ச் 20 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், மார்ச் 21 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.

இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 2-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. 

இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் அவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.  

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →