தமிழ்நாடு

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் புதிதாக 12,193 பேருக்கு தொற்று

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 11,692 ஆக இருந்த தொற்று பாதிப்பு சனிக்கிழமை 12,193 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,48,81,877 ஆக உள்ளது. மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,780 பேர் குணமடைந்துள்ளனர், மொத்தம் 4,42,83,021 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் விகிதம் 98.66 சதவீகிதமாக உள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 66,170 ஆக இருந்த நிலையில், இன்று சனிக்கிழமை 67,556 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT