ரமலான் திருநாளையொட்டி சங்ககிரியில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள். 
தமிழ்நாடு

சங்ககிரியில் ரமலான் சிறப்புத் தொழுகை! 

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியர்கள் சங்ககிரியில் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

DIN

சங்ககிரி: ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியர்கள் சங்ககிரியில் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

சங்ககிரி, சங்ககிரி ஆர்.எஸ்., சங்ககிரி மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் திருநாளையொட்டி நோன்பு இருந்து தொழுகை நடத்தி வந்தனர். அதனையடுத்து வெள்ளிக்கிழமை பிறை தெரிந்ததையடுத்து அரசு தலைமை காஜி அறிவித்த பின்னர் சனிக்கிழமை  ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்குவர் வாழ்த்துகள் கூறி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.  

ரமலான் திருநாளையொட்டி சங்ககிரி, பால்வாய் பகுதியில் உள்ள ஈதுகா மைதானத்தில் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள்.

பின்னர், சங்ககிரி மலையடிவாரம் முஸ்லிம் தெருவிலிருந்து பழைய, புதிய எடப்பாடி சாலைகள், சந்தைபேட்டை வழியாக தக்பீர் ஓதியபடி பால்வாய் பகுதியில் உள்ள ஈதுகா மைதானத்திற்கு ஊர்வலமாக சென்று அரசு காஜி முஹம்மதுஉவைஸ்  தலைமையில் சிறப்பு தொழுகை செய்தனர்.  பின்னர் அரசு காஜி ரமலான் சிறப்பு தொழுகையின் சிறப்புகள் குறித்து தமிழில் விளக்கிக் கூறினார்.  

இதே போன்று சங்ககிரி பயணிர்விடுதி சாலையில் உள்ள மஸ்ஜிதுல் மனார் பள்ளி வாசல், முஸ்லீம் தெருவில் உள்ள மொஹல்லா பள்ளி வாசல், சங்ககிரி கண்ணம்பாளி காடு உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT