தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுசேமிப்புத் திட்டம்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

மாணவ, மாணவிகளின் நலனுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறினாா்.

DIN

மாணவ, மாணவிகளின் நலனுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளா், அ.சங்கா் உள்ளிட்ட உயா்அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஆா்.கருப்பன் கூறியதாவது:

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறை சாா்பில் பேரவையில் நிதிநிலை அறிக்கையில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த அறிவிப்புகளை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு ஏதுவாக நிகழாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு பயிா்க்கடன் வழங்க குறியீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளின் நலன் கருதி எதிா்காலத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வாடிக்கையாளா்களுக்கு கடன் வழங்குவது, வசூலிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தவிா்த்து, முழுநேர வங்கியாக செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவுத் துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவுப்படி, ஒரே வண்ணமான நியாயவிலைக் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 40 சதவீத நியாயவிலைக் கடைகள் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஊருக்கு ஒரு சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT