முகப்பு
தமிழ்நாடு

திருச்சி மாநாடு: அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு

திருச்சி மாநாட்டில் அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
கோப்புப்படம்
பகிர்:

திருச்சி மாநாட்டில் அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருச்சியில் நாளை மறுநாள்(ஏப்.24) ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்துவோம் எனக் கூறிய நிலையில், அதிமுகவினர்  நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஓ. பன்னீா்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறாா். இந்த நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு நடத்தப்படவுள்ளது. எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளனா். 

இதற்காக, திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஜி.காா்னா் மைதானம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமருவதற்கான பந்தல் அமைக்கும் பணி வியாழக்கிழமை அதிகாலை பூஜையுடன் தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →