தமிழ்நாடு

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN



சென்னை: சென்னையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளத்தாகவும் புகார்கள் எழுந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப்.24) அதிகாலை சென்னை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. 

சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு அரசியல் கட்சியுடன் தொடர்பிருக்கிறதா என்றும், கறுப்புப்பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும், நஷ்டத்தில் இயங்கி வந்த ஜி ஸ்கொயர் நிறுவனம் திடீரென லாபத்தை ஈட்டியது எப்படி என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2019 ஆம் ஆண்டு ஏற்கனவே வருவமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT