முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

DIN

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் 12 மணிநேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 12 மணிநேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எப்போதுமே தொழிலாளர்களின் தோழனாகவே செயல்பட்டு வருகிறது என்றும், தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் மட்டுமே சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது எனவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் துறையில் அமைதி நிலவும் என்பதை திமுக அரசு உணர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. தற்போதும் அதே சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என முதல்வர் சுட்டிக்காட்டினார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது பல்வேறு தொழில் சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்திவைக்கப்படுகிறது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

SCROLL FOR NEXT